BLUETOOTH ஸ்பீக்கர் இல்லாததால் கடை உரிமையாளரின் கன்னத்தை பதம் பார்த்த போதை இளைஞர் : ஷாக் சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan11 May 2023, 1:58 pm
விழுப்புரம் ரஹீம் லேஅவுட் சேர்ந்தவர் ரமேஷ் சிங் விழுப்புரம் நகர பகுதியான நான்குமுனை சந்திப்பு அருகே செல்போன் பழுது நீக்கும் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றைய அவரது கடைக்கு இரண்டு இளைஞர்கள் வருகை புரிந்து ப்ளூடூத் ஸ்பீக்கர் வேண்டுமென கேட்டுள்ளனர். அதற்கு ரமேஷ் சிங் புளூடூத் ஸ்பீக்கர் இல்லை என தெரிவித்துள்ளார்.
போதையில் இருந்த இளைஞர் நான் கேட்டே இல்லை என்று கூறுவாயா என ஆத்திரமடைந்து செல்போன் உதிரிபாகங்களை எடுத்து ரமேஷ்சிங்கின் மேல் அடித்துவிட்டு கடையினுள் நுழைந்து ரமேஷ் சிங்கின் கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் சண்டையில் ஈடுபட்டவரை சமாதானமாக பேசி அனுப்பியுள்ளனர். இதனால் பாதிக்கபட்ட செல்போன் கடை உரிமையாளர் ரமேஷ் சிங் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய வண்டிமேட்டினை சார்ந்த திமுக பிரமுகரின் மகனான கார்த்திக் என்ற இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் செல்போன் கடை உரிமையாளரை மது போதையில் இருந்த இளைஞர் கன்னத்தில் அறைந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.