புஸ்ஸி ஆனந்த் இப்படியாச் சொன்னார்? வெள்ளி வேல் எங்கே? .. ராமநாதபுரம் தவெகவில் வெடித்தது உட்கட்சி பூசல்!

Author: Hariharasudhan
19 December 2024, 12:17 pm

ராமநாதபுரம் தவெக மாவட்டத் தலைவர், அமைப்பாளர் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலால் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவராக மலர்விழி ஜெயபாலா இருந்து வருகிறார். அதேநேரம், மாவட்ட அமைப்பாளராக பிபி ராஜா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் அன்னதானத்திற்கு பிபி ராஜா ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆனால், இந்த நிகழ்வு குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், தனக்கு முறையான அழைப்பிதழ் வழங்கவில்லை என்றும் மலர்விழி ஜெயபாலா குற்றம் சாட்டி உள்ளார். அது மட்டுமல்லாமல், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பிபி ராஜாவை நீக்கி, மலர்விழி ஜெயபாலா உத்தரவிட்டு உள்ளார்.

அதேபோல், மலர்விழி ஜெயபாலாவை நீக்கி பிபி ராஜா உத்தரவிட்டு ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார். இதனால், ராமநாதபுரம் தவெகவில் உட்கட்சி பூசல் வெடித்து உள்ளது. இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிபி ராஜா, “தவெக மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் எனது தலைமையிலான நபர்களேச் செய்தார்கள்.

னால், என் பெயரை அவர்கள் மறைத்துவிட்டனர். கட்சி சார்பாக நடந்த இணைப்பு விழாவுக்கு மூன்று வாகனங்களில் தொண்டர்களுடன் சென்றபோது, ஒரு கோஷ்டியினர் தங்களை தொண்டி பாதி வழியிலேயே மறித்துச் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர்.

Intra Party Conflict in Ramanathapuram TVk

அதன் பின்னர் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தைச் சந்தித்து முறையிட்டோம். அதற்கு ஆனந்த், ‘மலர்விழி அணியை ஏற்றுக் கொண்டால் அவருடன் சேர்ந்து பயணி, அப்படி ஏற்கவில்லை என்றால், நிகழ்ச்சி பேனர்களில் என் படத்தைப் போடாமல் விஜய் படத்தை மட்டுமே போட்டு தனியாகச் செயல்படு’ என்று கூறினார்.

இதையும் படிங்க: இளம்பெண்ணை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… வேலூரில் நொடியில் நடந்த விபரீதம்!!

எங்களை நீக்கும் அதிகாரம் தலைமைக்குத்தான் உண்டு. மாவட்டத் தலைவருக்கு இல்லை. நாங்கள் செய்த நற்பணிகளை எல்லாம் தலைவரின் கணவர் செய்ததைப் போல தலைமையிடம் காட்டிக் கொண்டு நல்ல பெயர் எடுத்து வருகிறார். நாங்கள் விஜய்க்கு பரிசாக வெள்ளி வேல் கொடுத்தோம். அது அவரது கைக்குப் போகவே இல்லை” எனக் கூறினார்.

அதேநேரம், பிபி ராஜா மீது பல குற்றவழக்குகள் உள்ளதா மலர்விழி ஜெயபாலா கூறியுள்ள்ளார். முன்னதாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, வி.சாலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது.

  • Sivaji and his sons ரகசிய மனைவியான நடிகையின் சகோதரி.. சிவாஜி மகன் செய்த சதி!
  • Views: - 53

    0

    0

    Leave a Reply