மிக மிக மோசமான முறையில் விசாரணை.. பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு.. நீதிபதி கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2023, 4:34 pm

மிக மிக மோசமான முறையில் விசாரணை.. பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு.. நீதிபதி கருத்து!!

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எதிரான சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடைபெற்று உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மிக மோசமான முறையில் வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துள்ளது

இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளோம் என்றும் தாமாக எடுத்த வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு நீதிபதி ஆனந்த் ஆணையிட்டார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக செப்.7-ஆம் தேதிக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு உத்தரவிட்டது.

வழக்கை தாமாக முன்வந்து எடுத்து ஏன் என்பது குறித்து 17 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளேன் எனவும் நீதிபதி கூறியுள்ளார். இதனிடையே, 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, அவர் மீதும் அவரது மனைவி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பின் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் சார்பாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தானாக முன்வந்து வழக்கு பதிந்து, அதை விசாரணைக்கு எடுத்துள்ளார். தற்போது, இவ்வழக்கு விசாரணையில் சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என கூறியுள்ளார்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 548

    0

    0