இந்திய பிரீமியர் லீக் 2025-ம் ஆண்டின் 18-வது சீசன் நாளை (மார்ச் 22) தொடங்க உள்ளது.இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
இதையும் படியுங்க: அவமானம்.!தங்கச்சி புருஷன் செய்த மோசடி…தலைகுனிந்த விஷால்.!
சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ்,பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ்,குஜராத் டைட்டன்ஸ்,லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன.
நாளை தொடங்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நேற்று,10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாக பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.மேலும், இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நடப்பு சீசனில் புதிய விதி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதாவது இரவு நேர ஆட்டங்களில் 2-வது இன்னிங்சின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடும்.இதனால் பவுலர்கள் சரியாக பந்து வீச முடியாது,அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்கள் குவிக்க முடிகிறது.இதை கருத்தில் கொண்டு,ஐபிஎல் நிர்வாகம் புதிய தீர்வை கொண்டு வந்துள்ளது.
முதல் 10 ஓவர்கள் முடிந்த பிறகு,பந்து அதிகம் ஈரமாகி விட்டதாக அணியின் கேப்டன் நினைத்தால்,நடுவரிடம் புதிய பந்து வழங்குமாறு கோரலாம். நடுவர் களத்தின் நிலைமையை பார்வையிட்டு,அதன் அடிப்படையில் பந்தை மாற்றுவது குறித்து முடிவு செய்வார்.
இந்த புதிய விதி முறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.