இரும்பு போர்டு விழுந்து பெண் பரிதாப பலி.. கட்டுமான பணிக்காக தடுப்பு வைத்திருந்த போது விபத்து!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2024, 12:03 pm

சென்னை தரமணியில் டி.எல்.எப் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்த ரேணுகா(30), ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருகிறார்.

நேற்றிரவு பணி முடித்து வீடு திரும்பிய போது பலத்த காற்றின் காரணமாக தடுப்பிற்காக வைத்திருந்த இரும்பு தடுப்பு போர்டு ரேணுகா மீது விழுந்ததில் வயிறு மற்றும் இடுப்பு எலும்பில் காயம் ஏற்பட்டது.

பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக தரமணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 308

    0

    0