பெங்களூருவில் இருந்து கோவைக்கு நகைகளை விநியோகம் செய்வதில் முறைகேடு : 13.5 கிலோ தங்க நகைகள் கையாடல்… நகைக்கடை ஊழியர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan3 October 2022, 6:12 pm
நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய வந்த 6.5 கோடி மதிப்பிலான தங்க நகை கையாடல் நடந்ததாக புகார் எழுந்த நிலையில் நகை கடை ஊழியர் மீது போலிஸர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் 25 வருடமாக இயங்கி வருவது அன்மோல் ஜுவல்லரி. இந்த ஜுவல்லரியில் ஊழியராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி.
பெங்களூரில் உள்ள மொத்த வியாபார நகைக்கடையான அன்மோல் ஜுவல்லரியிலிருந்து நகைகளை கோயம்புத்தூர் நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வது இவரது பணி.
நகைகளை ஒப்படைத்து அதற்கான ரசீது பெற்று பெங்களூருக்கு அனுப்பி பணம் பரிவர்த்தனையை கண்காணிப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் பெங்களூரிலிருந்து நகைகள் கோயம்புத்தூருக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்த நிலையில் அதனை குறிப்பிட்ட நகைக் கடைகளுக்கு தராமல் இருந்திருக்கின்றார்
இந்த நிலையில் அன்மோல் ஜுவல்லரி உரிமையாளர் சக்னால் காட்ரி, நகைகளை கொண்டு வந்த அனுமன் தூவேசிடம் விளக்கம் கேட்டிருக்கின்றார்
ஆனால் முறையாக பதிலளிக்காததால் நகை கையாடல் செய்ததாக சந்தேகம் அடைந்தார். இந்த நிலையில் 13.5 கிலோ எடையுள்ள 6.5 கோடி மதிப்பிலான தங்கம் கையாடல் செய்ததாக வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.