டெண்டர்களில் முறைகேடு… பேரூராட்சி தலைவர் அராஜகம் : விருது வாங்கிய விவசாயிக்கு நேர்ந்த துயரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 9:46 am

கோவை மாவட்டம் இருகூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கொரோனா காலத்தில் தன்னுடைய நிலங்களை விற்று பொதுமக்களுக்கு உதவிகாக இவரை பாராட்டி சேவா ரத்னா விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திராநகர் பகுதியில் அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்படும் நிலத்தை ஆண்டுக்கு 4,24,18 ரூபாய் செலுத்தி குத்தகைக்கு எடுத்து உள்ளார்.

குத்தகைக்கு எடுத்த நிலத்தில் உழுது விவசாயம் செய்து இருக்கிறார். நிலத்தில் பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்து உள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து தரப்பில் இருந்து நீர் பாய்ச்ச உதவும் மோட்டார் வேலை செய்யவில்லை எனக் கூறி அதை கழட்டி விட்டு சென்று உள்ளனர்.

ஆனால் நாகராஜ் தரப்பில் இருந்து மோட்டார் பழுதானது தொடர்பாக எந்த புகார் செய்யவில்லை மோட்டார் பழுதாகவில்லை என சொல்லப்படுகிறது.

மோட்டாரை கழட்டி சென்றவர்கள் திரும்ப கொண்டு வந்து பொருத்தவில்லை. நான்கு மாதங்கள் ஆன நிலையில் பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகி நிற்கிறது.

இதுகுறித்து நாகராஜ் பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

அதிகாரிகள் பேரூராட்சி தலைவருக்கு சாதகமாக செயல்படுவதாகவும், எந்த புகார் கொடுத்தாலும் அதை ஏற்க மறுப்பதாகவும் நாகராஜ் தரப்பில் சொல்லப்படுகிறது.

அதே போல பேரூராட்சி சார்ந்த டெண்டர்கள் அனைத்தையும் அவர்கள் சார்ந்தவர்களுக்கே கொடுத்து விடுவதாகவும். அதையும் மீறி கேள்வி கேட்கும் பொது மக்களை அலைக் கழிப்பதாகவும் புகார்கள் எழுகிறது.

பேரூராட்சி சார்பில் டெண்டர் விடப்படும் திருமண மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படும். ஆனால் இந்த திருமண மண்டபம் தற்பொழுது கீழ்த் தரத்தில் துணிக் கடையாகவும், மேல் தளத்தில் வாடகைக்கும் விடப்பட்டு உள்ளது.


அதேபோல இருகூர் மேம்பாலத்திலும் பள்ளங்கள் காணப்படுகிறது இந்த பள்ளத்தை சீரமைக்கும் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடப்பதாகவும், அதேபோல லே-அவுட் பிரித்து விற்பனை செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமலேயே அனுமதி வழங்குவதாகவும் புகார்களாக மாறி வருவதகாவும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து நாகராஜ் கூறும்போது:-மோட்டாரை திருப்பி தர முடியாது என்றும் நிலத்திற்கான வேலியின் சாவியை பேரூராட்சி இடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துவதாகவும் இதனால் இந்த முறைகேடுகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க இருப்பதாகவும், தெரிவித்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 420

    0

    0