சிசு பாலின விவகாரத்திற்கு முற்றுபுள்ளி? இரண்டு முறை மன்னிப்பு கேட்டுக் கொண்ட இர்ஃபான்!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 7:42 pm

பிரபல யூடியூபரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இர்பான் என்பவர் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து தாது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரம் நேற்றும் இன்றும் பெரியதாக பேசப்பட்ட நிலையில், சிசுவின் பாலினத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தொடர்பாக, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி மன்னிப்பு கோரினார் இர்பான்.

மேலும், இது தொடர்பாக தனது யூடியூப் பக்கத்தலும் மன்னிப்பு கேட்டு வீடியோவாக வெளியிட உள்ளதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இர்பான் தன்னுடைய விளக்கத்தையும், மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: பஸ், லாரி ஓட்டுநர்கள் கூட நன்றாக கட்டுரை எழுதுவார்கள்.. புனே சிறுவனுக்கு கிடைத்த நீதியை விமர்சித்த ராகுல்!

இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து முன்னதாக, இர்பானின் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இர்பான் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு, தான் பதிவிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை டெலிட் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இர்ஃபான் மன்னிப்பு கோரினாலும் அவர் மீது, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை கூறியிருந்த நிலையில், தற்பொழுது நேரில் சென்று மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ