திமுகவுக்கு வாக்கு சேகரிக்க வடிவேலு போல களமிறங்குகிறாரா நடிகர் சூரி? அவரே சொன்ன முக்கிய தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2024, 2:19 pm
திமுகவுக்கு வாக்கு சேகரிக்க வடிவேலு போல களமிறங்குகிறாரா நடிகர் சூரி? அவரே சொன்ன முக்கிய தகவல்!!
முதல்மமுறை வாக்காளர்கள் கன்னிச்சாமி போல. கன்னி வாக்கை செலுத்த தயாராக உள்ளனர். கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
நமது வாக்கு சாதாரமானது அல்ல. ஒவ்வொரும் செலுத்தும் வாக்கு நாட்டின் வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும். வாக்கை யாருக்கு செலுத்த வேண்டுமோ அதை கணித்து வாக்கை செலுத்த வேண்டும்.
கருடன் படம் பணிகள் முடிந்துவிட்டது. விடுதலைக்கு முன்பு கருடன் படம் வெளியாகும். உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளேன்.
உதயநிதி என்னை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் உள்ளேன் என அவருக்கு தெரியும். இது நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். நல்லதாகவே நடக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் மகிழ்ச்சி தான்.