கஞ்சா நகரமாக மாறுகிறதா கோவை? 8 மாதங்களில் 300 கிலோ.. இதுவரை 20 பேர் கைது : தீவிர சோதனையில் போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2024, 11:59 am
கோவை செப்டம்பர் 16ஒடிசா ஆந்திரா மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது.
டி.எஸ்.பி. ஜெயராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரேஷ்,சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் கோவை ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஓடிசா ஆந்திரா வழியாக கோவைக்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க: விபத்தில் சிக்கி இளைஞர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம் : உடலுக்கு அரசு மரியாதை!!
அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது குறித்து டி.எஸ்.பி. ஜெயராஜ் கூறியதாவது :-கடந்த 8 மாதங்களில் ரயில்களில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் கோவை வழியாக கேரளா செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.