கோவையில் அதிகம் பரவுகிறதா டெங்கு? சிகிச்சை முகாம்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக முழுவதும் டெங்கு போன்ற மழைக்கால நோய் தடுப்பு முகாம்கள் ஆயிரம் முகங்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி ஆயிரம் முகாம்கள் என்பது 1300 முகாம்களாக இன்று உயர்ந்து 1300 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கோவையை பொறுத்த வரை 107 இடங்களில் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சேலத்தில் 189 இடங்களிலும் மதுரையில் 129 இடங்களிலும் சென்னையிலும் திருச்சியிலும் தலா 45 இடங்களிலும் நீலகிரியில் 12 இடங்களிலும் என்று மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநகராட்சிகளும் நான்கு இடங்களிலும் சென்னையை பொருத்தவரை 15 மண்டலங்களிலும் 45 என்கிற அடிப்படையிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த 1300 முகாம்களிலும் பல்லாயிரக்கணக்கான பேர் பலன் பெற்று வருகின்றனர்.டெங்கு லெப்ட்ரோ ஃபைரோஸிஸ் பைபாஸ் ப்ளூ போன்றவை உறுதி செய்யப்பட்ட இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.கோவையை பொறுத்தவரை 107 முகாம்களில் இதுவரை 2354 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
தமிழகத்தில் டெங்குவிலிருந்து மக்களை காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற காரணத்தினால் டெங்கு போன்ற நோய்கள் கட்டுக்குள் இருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை 4354 பேருக்கு பாதிப்பு இருந்தது.
குறிப்பாக நேற்று மட்டும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 363 பேர் என இருந்தார்கள்.இந்த 363 பேரில் கோவையில் 10 பேர் என்ற வகையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.யாருக்கும் பெரிய அளவிலான உயிர் பாதிப்பு என்பது இல்லை.
ஏற்படுகின்ற பாதிப்பு என்பது ஆறாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை வரும் தென்மேற்கு மற்றும் பருவமழை ifsc கடந்து வெப்பச்சலன மழை, கோடை மழை என்று தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த மழை பெய்வதினால் ஆங்காங்கே நீர்த்தேக்கம். அதனால் உருவாகின்ற ஏடிஸ் கொசுக்கள் அதன் காரணமாக உருவாகின்ற டெங்கு போன்றவை இருந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாவட்ட ஆட்சியின் நிர்வாகங்களும் உள்ளாட்சி நிர்வாகம் முதல்வரின் வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு அக்டோபர் வரை 454 பேர் என்கின்ற அளவில் பாதிப்பு இருக்கிறது.
டெங்குவை பொறுத்த வரை டெங்கு கண்டறியப்பட்டு 2012 ஆம் ஆண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அந்த ஆண்டுக்கான மரணம் 13 பேர் அதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு உள்ளாகி 65 பேர் மரணம் அடைந்தனர்.இந்த இரண்டு ஆண்டுகள் தான் அதிகபட்ச மரணங்கள் தமிழகத்தில் பதிவானது. தொடர்ந்து மற்ற ஆண்டுகளில் ஓர் இலக்க பாதிப்பு தான் பதிவானது.
அதுவும் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த ஆண்டு இதேபோல் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் தேவைப்பட்டால் இந்த வடகிழக்கு பருவமழை முடியும் வரை இந்த முகாம்கள் நீடிக்கப்படும் என்றார்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.