I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகுகிறதா திமுக? செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த கனிமொழி!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2024, 9:58 am

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வந்த எம்.பி கனிமொழி தக்கலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறும் போது, ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் கலந்துகொண்ட விவகாரம்
கட்சிக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன அதுபோல் முதல்வருக்கு சில கடமைகள் உள்ளன.

இதில் எந்தவிதமான முரண்பாடுகள் இல்லை திமுகவை பொறுத்தமட்டில் யாரும் கலந்துகொள்ளவில்லை. அமைச்சரவையில் முக்கியமான அமைச்சர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

பாஜக தலைவராக இருப்பததால் தான் நாணய வெளியிட்டு விழாவில் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.

ஒன்றிய அரசாங்கம் நாணயத்தை வெளியிடுகிறார்கள். ஒன்றிய அமைச்சர்களும் நாணயத்தை வெளியிடுகிறார்கள். அதில் எப்படி தமிழக பாஜகவினருக்கு மாற்று கருத்து இருக்கமுடியும்.

திமுக இந்தியா கூட்டணியை விட்டுவிட்டு பாஜகவுடன் மெல்ல மெல்ல போவது பத்திரிக்கையாளர் கருத்துதான் நான் திமுகவில் தான் இருக்கிறேன்.எனக்கு தெரிந்து அப்படி எந்த எண்ணமும் இல்லை என தெரிவித்தார்.

பேட்டியின் போது பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 889

    0

    0