எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து? பாதுகாப்பற்ற சூழல் : அதிமுக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 2:12 pm

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் , திமுக அரசை கண்டித்தும் கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், பிஆர்ஜி அருண்குமார், கந்தசாமி, கேஆர் ஜெயராமன், ஏகே செல்வராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியின் மீது மக்கள் கோபமாக உள்ளனர்.

முன்னாள் முதலமைச்சருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு தற்போது சட்டம் ஒழுங்கு உள்ளது. திமுக அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும்,ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 394

    0

    0