இது ஸ்மார்ட் சிட்டியா இல்ல குப்பைத் தொட்டியா? மாநகராட்சியின் அலட்சியத்தால் கழிவுகளை கொட்டும் இடமாக மாறிய வாலாங்குளம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 11:13 am

கோவை சுங்கம் வாலங்குலம் ஸ்மார்ட் சிட்டியா இல்லை குப்பை தொட்டியா ? குளக் கரைகள் கழிவு கூடாரமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளக்கரை சுற்றிலும் மக்களுக்காக பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சி இடமாக உருவாக்கப் பட்ட சுங்கம் வாலாங்குளம் தற்போது சரியாக பராமரிப்பு இல்லாமல் கழிவுகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் பெயருக்கு பராமரிக்க பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாமல் பல கோடி ரூபாய் செலவு செய்து குளங்களை தூர்வாறியும், வண்ணவிலக்கு மற்றும் பொழுபோக்குகளால் அம்சங்களாக அலங்கரிக்கப் பட்ட போதிலும் இப்படி கழுவிகளை கொட்டியும் இரவு நேரங்களில் மதுபான பார்களாக மாறிவருவது பயனாளிகளுக்கு வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.

உடனே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு சீர்செய்ய வேண்டும் அதுமட்டுமல்லாமல் வரக் கூடிய பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி