சட்டசபையில் ஆளும் கட்சிகள் மட்டுமே பேசினால் அது ஜனநாயகம் ஆகுமா? நெல்லை முபாரக் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 12:56 pm
SDPU
Quick Share

எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெறுகிறது.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக அரசு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களுக்கு முழு அளவில் தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

மரக்காணம் மரணத்தில் தமிழக அரசு இன்னும் பாட கற்றுக்கொள்ளவில்லை. நிர்வாகம் தோற்றுப் போய் உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

மதுவிலக்கு பிரிவில் உள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 14,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதை முன்பே கண்காணித்து இருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருக்கலாம். இதனை செய்தியை சி பி சி டி ஐ விசாரணைக்கு கொடுத்திருக்கிறோம் என கூறி கைவிடுவரை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்பொழுது போதை, கஞ்சா பொருட்கள் பள்ளிகள் கல்லூரிகளும் சாக்லேட் வடிவில் கிடைக்கிறது. இதை தடுக்க முதல்வர் திட்டங்களை அறிவிக்கிறார் ஆனால் தடுக்கவில்லை.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும் போராடுவதற்கும் அனுமதி இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரத்துக்கு முன்பாக ஜாதிவாரி கணக்கெடுக்க ஒதுக்கப்பட்ட பின்பு இதுவரை எடுக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாத என தெரிவித்துள்ளார் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசு தேவைப்பட்டால் எடுக்கலாம் என சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதில் எங்களுக்கு பொறுப்பில்லை என முதல்வர் கூறுவது உண்மைக்கு மாற்றானது. இந்த விஷயத்தில் சட்டமன்றத்தில் தமிழக மக்கள் ஏமாற்றுவதை முதல்வர் கைவிட வேண்டும்.

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு காவல்துறையோடு 3தலைமுறையாக வேலை செய்தவர்களை அப்புறப்படுத்த முயல்வது, 2லட்சத்து 80 ஆயிரம் கொடுத்து அப்புறப்படுத்தும் நிலைமையை வன்மையானது சட்ட விரோத நடவடிக்கை.

தமிழக அரசு Tane Tea நிறுவனம் மூலமாக எடுத்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த வேண்டும். அந்த மக்களுக்கு தலைக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

நீட் தேர்வை விலக்க அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழகத்திற்கு கல்விக் கொள்கையை உடனடியாக கொண்டு வர வேண்டும். நீட் ஒழிப்புக்கு தமிழக அரசு தீவிரநடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.5 லட்சம் காலி பணியிடங்கள் இருந்தது அதிலிருந்து லட்சம் பணியிடம் நிரப்புவோன் என முதல்வர் வாக்களித்தார். தற்போது 5 லட்சமாக உயர்ந்துள்ளது. இரண்டு லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் கேலி செய்யும் போக்கு சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.சட்டமன்ற உறுப்பின வேல்முருகன் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

அதிமுக உறுப்பினர் சட்டமன்றத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது. அதிமுகவினர் கலவரம் செய்தார்கள் என்பது கூறுவது தவறானது. ஆளும் கட்சிகளால் மட்டுமே பேசினால் அங்கே எப்படி ஜனநாயகம் இருக்கும்.

அதிமுக தோற்றுவிடும் என்ற காரணத்தினால் போட்டியிடவில்லையா என்ற கேள்விக்கு? அவர்கள் அதற்கான காரணத்தை சொல்லி உள்ளனர். நாங்கள் அந்த காரணத்தை தான் கூறியுள்ளோம்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ கோரிக்கை கேட்டுள்ளார் எடப்பாடி என்ற கேள்விக்கு? எந்த விசாரணை என்பதை தாண்டி தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் எடப்பாடி பொறுப்பு ஏற்றுக்கொண்டாரா என்ற கேள்விக்கு? எந்த தவறையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

Views: - 84

0

0