இசைஞானியை சுடுசொற்களால் விமர்சிப்பது சரியா?: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி..!!

Author: Rajesh
17 April 2022, 9:10 am

புதுச்சேரி: பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தக முன்னுரை ஒன்றில் ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.

பிரதமர் மோடி, அம்பேத்கர் ஒப்பீடு குறித்த இளைராஜாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து தெலுங்கனா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே !!!!.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!