ஊரை அழிப்பவனுக்கு கேக் ஊட்டுவது தான் அமைச்சரின் பணியா? கொந்தளித்த ஜெயக்குமார்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2023, 9:58 am

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திண்டிவனத்தில் பிரபல சாராய விற்பனையாளர் மருவூர் ராஜா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மருவூர் ராஜாவுக்கு கேக் ஊட்டுவது போன்று உள்ள புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பதிவிட்டு, சாராய வியாபாரிக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு? ஊரை அழிப்பவனுக்கு கேக் ஊட்டுவது தான் அமைச்சரின் பணியா? அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!