நாங்களும் மனுசங்கதான்.. நீதி செத்துப்போச்சா? நடுரோட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிய திருநங்கைகள்.!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2024, 4:43 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருவதாகவும் இவரது வீட்டுக்கு செல்லும் சாலை பாதையை ஆக்கிரமிப்பு செய்தும் மற்றும் 10 சென்ட் வீட்டு மனை பட்டா இடத்தை கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அபகரித்து வருவதாக கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சங்கராபுரம் வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த திருநங்கை ரேணுகா மற்றும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

பேச்சுவார்த்தையில் சுமூகம் முடிவு எட்டப்படாததால் காவல்துறையின் தடையை மீறிமண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கமுயற்சி செய்த திருநங்கைகளால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 761

    0

    0