கை சின்னத்தில் கமல் போட்டியா? 2 நாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு : பேட்டியில் வைத்த ட்விஸ்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan19 February 2024, 12:59 pm
கை சின்னத்தில் கமல் போட்டியா? 2 நாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு : பேட்டியில் வைத்த ட்விஸ்ட்!!
நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரை ஆளும் திமுக கட்சி தனது கூட்டணியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது.
ஒரு பக்கம் அதிமுக, மறுபக்கம் பாஜக மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மநீம திமுக கூட்டணியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் நேற்று ஒரு தகவல் பரவியது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் இடங்களில் கமல் போட்டியிட வேண்டும் என்றும், குறிப்பாக கை சின்னத்தில் கமல் போட்டியிடுவார் என்ற தகவலும் பரவியது.
இந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க நாளான பிப்.21-ம் தேதி அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார். அப்போது, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இ
ந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசனிடம் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து கமல் கூறியதாவது, தக் லைஃப் திரைப்படத்தின் முன்னேற்பாடு பணிகளை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறேன். இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
வெளிநாட்டில் இருந்து எந்த நல்ல முடிவையும் நான் எடுத்து வரவில்லை. இங்கே தான் நல்ல முடிவுகளை உருவாக்க வேண்டும். இதனால் 2 நாட்களில் எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றார்.