எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு சாத்தியமா? பாட்னா ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2023, 6:12 pm

மதசார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பீகார் மாநில பாட்னாவுக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் மதசார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு, பாஜகவை வீழ்த்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், நாளை நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி