சொத்து வரி, குடிநீர் வரி கட்டலையா? இனி நீங்க NEWSல வருவீங்க.. கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 2:31 pm

கோவை மாநகராட்சியில் தற்போது பல்வேறு இடங்களில் வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்து வருகிறது.

மேலும் வரி செலுத்தாமல் இருக்கும் கடைகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பி வருகிறது.

எனினும் வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் பல்வேறு கடைகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வரி செலுத்தாமல் அதிகமான நிலுவைத் தொகை வைத்துள்ள நபர்களின் பெயர் தினசரி நாளிதழ்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் அதிக தொகை நிலுவை வைத்துள்ளவர்கள் வருகின்ற 30ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகைகளை செலுத்தி விட வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அதிகமான நிலுவைத் தொகை வைத்துள்ள நபர்களின் பெயர் நிலுவைத் தொகை உள்ளிட்ட விவரங்கள் தினசரி நாளிதழ்களிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!