Categories: தமிழகம்

தலிபான்களுடன் ஆர்எஸ்எஸ் கைக்கோர்த்துள்ளதா? வன்முறைத்தனமான பேச்சு எதற்கு? கொந்தளித்த துரை வைகோ!!

தலிபான்களுடன் ஆர்எஸ்எஸ் கைக்கோர்த்துள்ளதா? வன்முறைத்தனமான பேச்சு எதற்கு? கொந்தளித்த துரை வைகோ!!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநாடு குறித்தான கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பொதுக்கூட்டம் குறித்தான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சனாதனம் கலாச்சாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இந்து மதம் என்பது வாழ்வியல் முறை. அதில் சிலர் திரித்து மக்களிடம் பிரிவினை உருவாக்கும் வகையில் சாதிகளை உருவாக்கினார்கள்.

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் போராடியது இந்து மதத்திற்கு எதிராக அல்ல. வட நாட்டில் 48 மணி நேரமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள்.

அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதி கழுத்தை சீவுவேன் என தலிபான் போல சொல்கிறார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்கள் படிக்க கூடாது, மாற்று கருத்து சொன்னால் கழுத்தை அறுப்பேன் என சொல்கிறார்கள்.

அதே கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து. இது தான் சனாதனம். மதம், சாதி வைத்து அரசியல் செய்யக்கூடாது. விவாதம் இருக்கலாம். ஆனால் வன்முறை இருக்க கூடாது.

உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் திமுக, இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்க மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்கள்.

அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்ற பெயர் வருவதற்கு முன்பே இந்தியா என்ற பெயர் தான் வந்தது. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது பெயர் மாற்றம் இப்போது தேவையா? இது தேவையில்லாத சர்ச்சை.

திமுக ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. பல தேர்தல்களில் பெரும்பான்மை பலம் வருவதில்லை.

அதனால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள். மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பாஜக ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் அடித்தளம். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே இந்தியா என்ற பெயர் வந்து விட்டது. ஆர்.பி.ஐ, பி.சி.சி.ஐ பெயர்களையும் மாற்றுவார்களா? இது தேவையில்லாத குழப்பம் எனத் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

36 seconds ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

46 minutes ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 hour ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 hour ago

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பள்ளி மாணவன்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!

சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…

2 hours ago

This website uses cookies.