சாம்பாரில் கரப்பான்பூச்சியா? கரப்பான்பூச்சியில் சாம்பாரா? சிக்கிய பிரபல அசைவ உணவகம் : உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 9:09 am

திருப்பூர் : பிரபல உணவகத்தின் சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் ஷாக் ஆன நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தை சேர்ந்த கேசவன். இவர் இன்று மதியம் திருப்பூர் குமரன் ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ உணவகமான மயூரா ஹோட்டலில் குடும்பத்துடன் உணவருந்த சென்றார்.

அப்போது அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபொழுது முறையான பதில்கள் கூறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிர்ச்சியடைந்த கேசவன் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கரப்பான்பூச்சி இருந்த சாம்பாரை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பினர்.

இதன் முடிவுகள் வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1163

    0

    0