மீண்டும் வருகிறதா கொரோனா பேரலை? எந்த அலை வந்தாலும் தயார் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 4:29 pm

தமிழ்நாட்டில் எந்த அலை வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறைந்துவரும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகி வருவதாகவும், அதே நேரத்தில் வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 20 பேர் கொரோனா சிகிச்சையில் இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போது ஓமந்தூரர் மருத்துவமனையில் 11 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை என தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தயாராக இருப்பதாகவும், 9 மாதங்களுக்கு பிறகு குறித்த நேரத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

மருத்துவ தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்ட நிலையில் தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகமே தடுப்பூசி குறித்த முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி