ஏழை மக்களுக்கு திராவிட மாடல் தரும் பரிசா? வயிற்றில் அடிக்காதீங்க ; கொந்தளிக்கும் தமிழிசை..!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2024, 9:47 am

தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 4.83 சதவீதம் வரை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு ஜூலை 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை, தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா?

அடுக்குமாடி குடியிருப்பு முதல் ஏழை எளிய மக்கள் வரை வாக்களித்தவர்களுக்கும்,வாக்கு அளிக்காதவர்களுக்கும் பரிசா இந்த மின் கட்டண உயர்வு…

சொன்னதை செய்யாமல்…. சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல்….

விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் விடியா திராவிட மாடல்…

ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 269

    0

    0