தடை செய்யப்படுகிறதா பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம்? ஆளுநர் ஆர்.என் ரவி சூசகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 2:17 pm

சென்னை : அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என ஆளுநர் ரவி பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, நாட்டையே பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சீர்குலைப்பதாகவும் அது ஆபத்தான இயக்கம் என குற்றம்சாட்டினார்.

மேலும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும், அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது அதே போல, அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என ஆளுநர் கூறினார்.

கேரளாவில் நிகழ்ந்த அரசியல் மரணங்களை தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படக்கூடும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் இதே கருத்தை தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கடுமையாக விமர்சித்து ஆளுநர் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேசனல் டெவலப்மெண்ட் பிரண்ட் என்ற அமைப்பு கடந்த 2006ம் ஆண்டு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக மாறியது. பின்னர் தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் கர்நாடக கண்ணிய மன்றம், கோவாவில் குடிமக்கள் மன்றம், ராஜஸ்தானில் கல்வி மற்றும் சமுதாய சமூகம், மேற்கு வங்கத்தில் நகரிக் அதிகர் சுரக்ஷா சமீதி, மணிப்பூரில் லிலிங் சமூக மன்றம், ஆந்திரத்தில் சமூக நீதிக்கழகம் போன்ற அமைப்புகள் PFIயுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி