SPECIAL CLASS இருக்கா.. பள்ளிகளுக்கு வந்த திடீர் ஆர்டர் : பள்ளிக்கல்வித்துறை ACTION!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 2:07 pm

SPECIAL CLASS இருக்கா.. பள்ளிகளுக்கு வந்த திடீர் ஆர்டர் : பள்ளிக்கல்வித்துறை ACTION!!

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது. இதனை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் படிக்க: கோயிலுக்கு போகக்கூடாதா.. தீயசக்தி மிஷ்கினை கைது செய்யுங்க… ஹெச் ராஜா பரபரப்பு!!

மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!