இதுக்கு ஒரு முடிவே இல்லையா? மீண்டும் மீண்டும் விபத்தை ஏற்படுத்தும் புதிய மேம்பாலம் : அச்சத்துடன் பயணிக்கும் கோவை வாகன ஓட்டிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 10:47 am

கோவை: மீண்டும் மீண்டும் தொடரும் விபத்து !!! திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இதன் காரணமாக அந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால்,வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இப்படி 3 பேர் பலியான நிலையில், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனிடையே இன்று கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றன.

அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றன.அப்போது அங்கிருந்த வேகத்தடைகளை இரண்டு கார் ஓட்டிகளும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த மேம்பாலத்தில் விபத்துகள் நடைபெற்று வருவது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!