இந்த மோசடிக்கு ஒரு END இல்லையா? அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி… சிக்கிய தாய், மகன்!!!
Author: Udayachandran RadhaKrishnan6 April 2023, 11:05 am
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், அவரது தாயார் மணி, மனைவி ஷோபனா ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் ஆகியுள்ளனர்.
இதனை அடுத்து மோகன் குமார் பூபதியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு 5.44 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார். இதனை அடுத்து பூபதியும் கடந்த 2021ம் ஆண்டு மோகன் குமாரிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார்.
45 நாட்களில் வேலை வாங்கி தருவதாக கூறிய நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாகியும் வேலை வாங்கி தராததாக தெரிகிறது. பின்பு தான் மோகன்குமார் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது பூபதிக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து பூபதி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மோகன்குமார், அவரது தாயார் மற்றும் மனைவி சேர்ந்து ஒன்பது பேரிடம் சுமார் 36 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து விசாரணையின் அடிப்படையில் மோகன் குமார் மற்றும் அவரது தாயார் மணி ஆகிய இதுவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து தேர்வர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருகை புரிந்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.