அவசர திருமணத்திற்கு இப்படி ஒரு பின்னணி காரணம் இருக்கா.? புது கணக்கு போடும் நயன்தாரா.!
Author: Rajesh11 May 2022, 4:07 pm
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தின் போது, நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருவரும் எப்போது, திருமணம் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அவ்வப்போது இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களையும் குஷிப்படுத்தி கொண்டிருந்தனர். இப்பொழுது திடீரென்று கல்யாணத்திற்கு அவசரப்பட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு காரணம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நயன்தாராவுக்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து, நடித்தால் 2 முதல் 3 ஆண்டுகள் வரை அங்கு ஒரு ரவுண்டு வரலாம் என எதிர்பார்க்கிறார். அதனால் தான் கல்யாணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற ஒரு திட்டம் போட்டு இருக்கிறாராம் நயன்தாரா.
மேலும் இந்த நேரத்தை விட்டால் திருமணம் இன்னும் தள்ளிப்போகும் என்பதற்காக வேகவேகமாக திருமண ஏற்பாடுகளை திருப்பதியில் செய்துகொண்டிருக்கின்றனாரம். இதற்காகவே மட்டும் ஒரே வாரத்தில் இரண்டு முறை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதிக்கு சென்று அங்கு நடக்கும் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.