திருமாவளவன் வேட்பு மனு ஏற்பா? இல்லையா?.. களத்தில் 14 வேட்பாளர்கள் மட்டுமே : ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2024, 2:55 pm

திருமாவளவன் வேட்பு மனு ஏற்பா? இல்லையா?.. களத்தில் 14 வேட்பாளர்கள் மட்டுமே : ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் சார்பாக 27 மனுக்களை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

இதில், திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி கட்சி வேட்பாளர் நீலமேகம் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் சுழற்சி வேட்பாளர்களான ராமுகாந்தி, பூரணகுமார், சாமிநாதன், சந்திரகாசி, ராஜேஷ் ஆகிய ஐந்து சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்தார்.

மேலும் பிரதான வேட்பாளர்களான அதிமுக,பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர்களின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அதிமுக ராஜ்குமார், பாஜக பிருந்தா, நாம் தமிழர் கட்சி இரஞ்ஞினி ஆகியோரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்பொழுது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளர்களாக ஐந்து பேரும் சுயாட்சிகளாக 9 பேரும் சேர்த்து மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 216

    0

    0