விஜய் ரசிகருக்கு இப்படியொரு சோதனையா? TVK நிர்வாகியின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தியதால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2024, 11:46 am
விஜய் ரசிகருக்கு இப்படியொரு சோதனையா? TVK நிர்வாகியின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தியதால் பரபரப்பு!
நாடாளுமன்றத் தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி அருகே ஆயக்குடி 44 வது வாக்குச்சாவடியில் விஜய் ரசிகர் மன்றம் ( தமிழக வெற்றி கழகம்) நகர துணை தலைவர் சரவணன் வாக்கு செலுத்த வந்தபோது சரவணன் உடைய வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாகவும் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து தான் வாக்கு செலுத்தவில்லை என்றும் அதிகாரியிடம் முறையிட்டபோது இது குறித்து மண்டல தேர்தல் அதிகாரி தகவல் தெரவிக்கபட்டு வருகை தந்தார்.
மேலும் படிக்க: #TNElection… தேர்தலில் பணமழை கொட்டுது.. நியாயமான தேர்தல் கிடையாது.. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
அப்போது இது குறித்து விசாரித்த போது மூன்று பூத் ஏஜெண்டுகள் இருந்தபோது மூன்று ஓட்டு ஜாப்தாவில் இரண்டில் புகைப்படம் , வாக்காளர் எண் சரியாக இருந்துள்ளது.
ஒரு ஓட்டு ஜாப்தாவில் வேறொரு போட்டோ இருந்ததை பூத் ஏஜெண்டுகள் கவனிக்க தவறியதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் வாக்களிக்க முடியாமல் போன இளைஞருக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்குவாதம் ,பழனியில் விஜய் மன்ற நிர்வாகி வாக்களிக்க முடியாமல் தவித்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.