கோவை : திமுக.,வினரே வந்து வெள்ளலூரில் பிரச்சனை செய்து தேர்தலை தள்ளி வைத்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூனன், தாமோதரன் மற்றும் வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தமிழரசி, கருணாகரன், சந்திரகுமார், கணேசன், உமா மகேஸ்வரி, பார்வதி, மருதாசலம் ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் 8 பேரும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளலூர் பேரூராட்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளோம். மேலும், கடந்த 2ந் தேதி நடைபெற்ற வார்டு உறுப்பினர் பதவி பிரமாணத்தில் எங்களைத் தடுக்க திமுக உறுப்பினர்களும் அவர்களைச் சேர்ந்த வெளியூர் நபர்களும் எங்களை அவர்களது கட்சியில் சேர வேண்டி தினமும் மிரட்டி வந்தனர்.
இந்தநிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்போது திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் சில பேர் தலைவர் தேர்தலை நடக்கவிடாமல் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்த அதிமுகவினரை தாக்கியும் அங்கிருந்த நாற்காலி மற்றும் பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி மற்றும் அங்கிருந்த போலீசாரிடம் முறையிட்ட போது அவர்களும் திமுக நபர்களுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் எங்களையும் மிரட்டி வந்தனர்.
இச்செயலானது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது. தலைவர் தேர்தலில் சுமூகமான முறையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளாதவாறு நல்ல முறையில் தலைவர் தேர்தலை நடத்திட வேண்டும் எங்கள் உடமைக்கும் ஒரு உயிருக்கும் பாதுகாப்பு தர வேண்டும்.தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எம்.எல்.ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்தில் இருந்து திமுக பல வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள், சிலருக்கு கத்திக்குத்தும் விழுந்தது. தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு முறைகேடு நடத்தினர். அமைதியான கோவை மாவட்டத்தில் வன்முறையால் முறைகேடான வெற்றி பெற்றனர்.
ஓட்டு இயந்திரம் மூலமும், கள்ள ஓட்டுகள் மூலமும், மாலை 5-6 மணி வரையும் என முறைகேடு செய்து வெற்றி பெற்றனர். இதை மீறி வெள்ளலூரில் அதிமுக.,வை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர்.
இன்று மறைமுக தேர்தலுக்கு சென்ற உறுப்பினர்களின் கார்களை வெளி மாவட்ட காரர்கள் வந்து கத்தி, கம்புடன் வந்து தாக்கினர். மேலும், உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கோவையில் எந்த காலத்திலும் இப்படி நடந்ததில்லை. தொடர்ந்து புதுமையாக, வன்முறையாக உள்ளது.
திமுக.,வினரே வந்து வெள்ளலூரில் பிரச்சனை செய்தனர். இப்போது காரணம் இல்லாமல் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.
தேர்தல் தொடர்பாக நீதிமன்றமே அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனிடையே நாங்கள் திமுக.,வினரை அடித்ததாக போத்தனூர் போலீசில் இன்று புகார் அளித்துள்ளனர். இது ஜனநாய படுகொலை.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். கூடுதல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை வைத்து தேர்தல் நடத்துவதாக கூறியுள்ளனர். முறையாக தேர்தலை நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.