Categories: தமிழகம்

இது நீதியா? பழிவாங்கலா? சவுக்கு சங்கருக்கு வழங்கியது இயற்கை முரணுக்கு எதிரான தீர்ப்பு : நீதிபதிக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்!!

நீதிமன்ற அவமதிப்புக்கு 6 மாத சிறை தண்டனை பெற்றுள்ள சவுக்கு சங்கரை விடுவித்து நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் அதிகாரம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதாக உள்ளது.

நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போதும் விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்கள் அப்பாற்பட்டவையா? நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்களே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியும். நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இது பொருந்தும் தானே. ஆனால், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர். அந்தவகையில் தான் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

அக்குற்றத்துக்கு அதிக அளவு தண்டனை என்னவோ (ஆறு மாதங்கள்) அதனையே அளித்துள்ளனர். இது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதற்காக கடந்த ஆண்டு விசிக சார்பில் மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளோம் என்பதைத் தமிழக அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்த தண்டனை இயற்கை நீதிக்கு (Natural justice) எதிரானதாக உள்ளது. எனவே, இதனை நீதிமன்றமே ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும். பொதுவாக ஒரு வழக்கில் வாதி – பிரதிவாதி என இரண்டு தரப்பு இருக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளிக்கும் இடத்தில் நீதிபதி இருப்பார்.

ஆனால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவரெனக் கூறப்படும் நீதிபதியே தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். எனவேதான் இது இயற்கை நீதிக்கு முரணானதாக உள்ளது என்கிறோம்.

வளர்ந்த நாடுகள் பெரும்பாலானவற்றில் நீதிமன்ற அவமதிப்பு என்னும் பிரிவே சட்டத்தில் இல்லை. பொதுவாக நீதிபதிகள் ஒரு வழக்கில் தாம் மறைமுகமாகத் தொடர்பு கொண்டிருந்தால் கூட அந்த வழக்கை விசாரிக்காமல் விலகிக் கொள்வது வழக்கம்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே வழக்கை விசாரித்து தண்டனையும் அளித்திருக்கிறார். இது சட்டப்படி முறையானதல்ல என்று பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

1971 ஆம் வருடத்திய நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் அதிகபட்ச தண்டனையே ஆறு மாதம் சிறைதான். இந்த வழக்கில் அந்த அதிகபட்ச தண்டனையை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். இது நீதி வழங்குவது என இல்லாமல் பழிவாங்குவதாக உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்கவில்லை என்ற காரணத்தை கூறித்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.நீதிபதிகள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது, கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு இந்த தண்டனையை ரத்து செய்ய மாண்புமிகு நீதிபதிகள் முன்வரவேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

22 வயது இளைஞருடன் உல்லாசம்.. கணவனுக்கு தெரியாமல் காரியத்தை கச்சிதமாக முடித்த மனைவி!

குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

16 minutes ago

திமுக எம்எல்ஏ சொன்னதுலாம் வேணாம்.. திமுககாரங்க சொல்றத கேளுங்க.. பிடிஓ அலுவலகத்தில் ரகளை!

கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு…

18 minutes ago

களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!

'வாடிவாசல்' படத்திற்கான முக்கிய அப்டேட் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து…

30 minutes ago

ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் கிடந்த நபர்.. திருநங்கையாகும் ஆசையில் மரணம்.. என்ன நடந்தது?

தென்காசி அருகே பெண்ணாக மாற முயற்சித்து, சக திருநங்கைகளால் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். தென்காசி: தென்காசி…

1 hour ago

எம்ஜிஆர், ஜெ.,வுக்கு சேரும் கூட்டத்த பாத்திருக்கேன்.. ஆனா விஜய்க்கு வந்த கூட்டம் இருக்கே : பிரபலம் ஷாக்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியல்வாதியாக…

2 hours ago

இதைச் செய்தால் அடுத்தும் ஆதிக் தான்.. AK 64 சீக்ரெட் வெளியானது!

குட் பேட் அக்லி படம் எதிர்பார்த்த வசூலைக் குவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்…

2 hours ago

This website uses cookies.