இது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் விற்பனைக் கிடங்கா? போதை பொருள் ஒழியும் நாங்க விட மாட்டோம் : இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 9:48 pm

இது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் விற்பனைக் கிடங்கா? போதை பொருள் ஒழியும் நாங்க விட மாட்டோம் : இபிஎஸ் கண்டனம்!

அண்மையில் டெல்லியில் போதைப் பொருள் கடத்தியதால ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார், இதற்கு முக்கிய கூட்டாளியான திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கை தேடி வருகிறது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆளும் திமுக கட்சி மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன. இது தவிர தமிழகத்தில் இன்று இரு இடங்களில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தளப்பக்கத்தில் அவர், தமிழ்நாட்டில் இன்று இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்க பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது.

ரயில் கூப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப்பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன. நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்தவிற்பனைக் கிடங்கா?

திரு. ஸ்டாலின் அவர்களே- விழிதெழுந்து , தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுங்கள். இனி தமிழ்நாட்டில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை.

காவல்துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்து, இந்த போதைப் பொருட்களை புழக்குவோர் யாராக இருப்பினும், எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டை போதைப் பொருள் அறவும் அற்ற மாநிலமாக மாற்றவேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?