இதுதான் சட்ட ஒழுங்கை காப்பாத்துற லட்சணமா? மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தருவீங்க.. திமுகவை வெளுத்த டிடிவி தினகரன்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 2:30 pm

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, விசாரணைக் கைதிகள் மரணம் என தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் நீதிமன்ற வளாகம் அருகே நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

அதே போல சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தலைநகர் சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து நான்கு ATMகளில் நடந்த கொள்ளை, திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.

கோவையில் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை போன்ற செய்திகள் தமிழ்நாடு காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்குகின்றன.

கொள்ளை சம்பவங்களில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினரே தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படை அமைத்து வடக்கு மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!