பொதுத்தேர்வை எழுத வராத 42 ஆயிரம் மாணவர்கள்… காரணம் இதுதான்? அமைச்சர் அன்பில் மகேஷ் கூல் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 4:23 pm

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நூலை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இந்த ஆண்டு மாணவ- மாணவிகள் 4 முதல் 5 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. இது வழக்கமான ஒன்றுதான். கடந்த 2019ஆம் ஆண்டு 6 முதல் 7 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. அதாவது 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை.

மாணவ -மாணவிகள் தேர்வு எழுத பயப்படக்கூடாது. தைரியமாக இருந்து தேர்வு எழுத வேண்டும். மதிப்பெண் மட்டுமே உங்களை தீர்மானிப்பது அல்ல. நீங்கள் எடுக்கும் மதிப்புக்கு ஏற்றவாறு மேல்படிப்பு படித்து எந்தத் துறையில் வேலைக்கு சேர வேண்டுமோ அதில் சேருங்கள்.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த முறை முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டார். இந்த முறையும் அவர் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வருவார் என எதிர்பார்க்கிறோம்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?