தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று ஜனநயாக கடமையை ஆற்றி வருகின்றனர்.
நடிகர்கள் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். எப்போதும் வாக்குப்பதிவின் போது ரஜினி முன்கூட்டியே வந்து விடுவார். ஆனால் இன்று நடைபெற்ற தேர்தலில் ரஜினி தற்போது வரை வாக்களிக்க வரவில்லை. இதனால் ரசிகர்கள், ஊடகங்களின் பார்வை அவர் மீது விழுந்துள்ளது.
இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரஜினி வாக்களிக்க வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது மகள் ஐஸ்வர்யா – தனுஷ் விவகாரம் வெளியே தெரிந்துவிட்டதால் வீட்டை விட்டு வராமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியின் பரஸ்பரமாக பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த விவகாரம் அவரது ரசிகர்கள், சினிமாத்துறை மற்றும் அவர்களது நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
இரு வீட்டாரும் இருவரை சமாதானப்படுத்தி விடலாம் என நினைத்திருந்தனர். ஆனால் நினைத்து ஒன்று நடந்தது ஒன்று என இரு வீட்டாரும் அந்த முயற்சியை கைவிட்டு விட்டனர். இந்த நிலையில் தனுஷ்சை காதலிக்கும் போது ஐஸ்வர்யா, ரஜினியிடம் தனது காதல் விவகாரத்தை கூற, ரஜினி மறுப்பு தெரிவித்ததாகவும், பின்னர் சம்மதம் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
அப்போது ரஜினி இது வேண்டாம் என்று தவிர்த்த போது, அவரை ஐஸ்வர்யா சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். அந்த வார்த்தையை ரஜினி தற்போது ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளார். ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. ரஜினி சமாதானம் சொல்லியும் ஐஸ்வர்யா தான் எடுத்த முடிவில் பின்வாங்கவில்லை.
இதற்கெல்லாம் முக்கிய காரணமாக உள்ளது தனுஷின் தகாத நடவடிக்கையே. தனுஷின் நடவடிக்கை குறித்து ஐஸ்வர்யா சொன்னதை கேட்டு ஆடிப்போன ரஜினி, இனி சமாதானம் செய்ய முன்வரப்போவதில்லை என்றும், ஐஸ்வர்யாவின் விருப்படியே அவரது வாழ்க்கையை பார்த்துக்கொள்ள ரஜினி விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இனி தலையீடு செய்ய போவதில்லை என முடிவெடுத்துள்ள ரஜினி, இந்த பிரச்சனை குறித்தும் இனி வெளியே எதுவும் பேச வேண்டாம் என ரஜினியும் ஐஸ்வர்யாவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை இதன் காரணமாக கூட ரஜினி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வர விருப்பமில்லை என்றே கூறப்படுகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.