மனைவியை விவாகரத்து செய்கிறாரா விஜய் சேதுபதி.? காரணம் அந்த பிரபல நடிகையா.?

Author: Rajesh
18 May 2022, 11:00 am

தமிழில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவை தாண்டி வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் சேர்ந்து ரம்மி, கா.பெ. ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் வளர்ச்சிக்கு விஜய் சேதுபதியின் உதவி அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறிகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருவதாகவும் வெளியான விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஜய்சேதுபதி ஒத்துக் கொண்டதாகவும் பயில்வான் தெரிவித்த தாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவிக்கு இந்த விஷயம் தெரியவர ஐஸ்வர்யா ராஜேஷ் மீது செம காண்டில் இருந்தாராம்.

இதனிடையே விஜய்சேதுபதியின் மனைவிக்கும் விஜய் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து வரை இந்த விஷயம் போயுள்ளதாம். பின்னர் விஜய் சேதுபதி தன்னுடைய மனைவியிடம் சமாதானமாக பேசி தற்போது நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம் என விஜய்சேதுபதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் என பயில்வான் கூறியுள்ளதாக தெரிகிறது.

பொதுவாகவே நடிகர்-நடிகைகள் இதுபோல காதல் வதந்திகளில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தன்னுடைய திரைப்படங்களில் கவனமாக நடிக்கும் விஜய் சேதுபதி தற்போது இதுபோன்ற சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது அவரது ரசிகர்களை சற்று வருத்தமடையச்செய்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கத்தில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை. கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!