விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் கூட்டுச்சதியா? உடனே ஆக்ஷன் எடுங்க : நாம் தமிழர் கட்சி பரபரப்பு புகார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 8:41 pm

விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் கூட்டுச்சதியா? உடனே ஆக்ஷன் எடுங்க : நாம் தமிழர் கட்சி பரபரப்பு புகார்!!!

நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் இடையேயான பிரச்சனை கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலெட்சுமி ஆகியோர் சேர்ந்து சீமான் மீதும் நாம் தமிழர் கட்சியின் மீதும் அவதூறு பரப்புவதாகவும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பேசி வருவதாகவும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வெற்றிச் செல்வன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.

இந்த புகார் மனுவினை நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வினோதினி கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தார்.

சீமானின் நற் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும் அரசியலில் சீமானின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்கிற தீய நோக்கத்துடனும் செயல்படும் முன்னாள் நடிகை விஜயலெட்சுமியும் அவருடன் பெயர் தெரியாத லெட்டர் பேடு அமைப்பு நடத்தி வரும் வீரலெட்சுமி என்கிற இரண்டு பெண் நபர்களும் கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டுகின்றனர் என்று இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிற கட்சிகளின் தூண்டுதலின் பேரில் பொய்யாகவும் அவதூறாகவும் அரசியல் உள்நோக்கத்துடனும் 15 வருடங்களுக்குப் பிறகு அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். பணம் பறிக்கும் நோக்கத்துடன் குற்றச்சாட்டைக் கூறிவரும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ