பணமழை பொழியப் போகுது… உங்களுக்கு மேஷம் ராசியா? குரு பெயர்ச்சி பலன் எப்படி இருக்கு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 2:10 pm

குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

எதிலும் வேகத்துடன் விவேகமாகவும் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. மனம் எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சகபணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கவுரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்
துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமையில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!
  • Close menu