சத்குரு வாக்களித்தார்… ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 5:31 pm

கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று (19.04.2024) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சத்குரு தனது வாக்குகளை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

மேலும் படிக்க: ‘இப்ப மட்டும் ஏன் வர்றீங்க..?’ அமைச்சரை காரை விட்டு இறங்க விடாமல் விரட்டியடித்த மக்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!!

அதே போன்று ஈஷா யோக மையத்தை சார்ந்த நூற்றுக்கணக்கான பிரம்மச்சாரிகள் தங்களின் வாக்கினைப் பதிவு செய்தனர்.

அவர்களுடன் ஈஷா முழு நேர தன்னார்வலர்கள், ஆசிரமாவாசிகள் என ஈஷாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர்.

முன்னதாக தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த சத்குரு அவர்கள் “நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையில் எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 234

    0

    0