ஈஷா மஹாசிவராத்திரி அனைத்து கலாச்சார தடைகளையும் கடந்தது… துணை குடியரசு தலைவர் புகழாரம்!!

Author: Babu Lakshmanan
28 February 2022, 6:04 pm

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு மாண்புமிகு துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்களும், நேபாள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு. சர்மா ஒலி அவர்களும் சத்குருவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

இது தொடர்பாக துணை குடியரசு தலைவர் அனுப்பியுள்ள வாழ்த்து வீடியோவில், “ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம், உலகம் முழுவதும் இருந்து வரும் சிவ பக்தர்களுக்கு அனைத்து விதமான கலாச்சார தடைகளையும் தாண்டி, தெய்வீக மற்றும் தனித்துவமான சூழ்நிலையை வழங்குகிறது.

இந்த நன்னாளில், சிவ பெருமான் நம் அனைவருக்கும் தனது தெய்வீக ஆசிகளை வழங்கி, உண்மை, தூய்மை மற்றும் தெய்வீகத் தன்மையுடன் முன்னேற்றம் பெற வலியை தரட்டும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி கூறும் விதமாக ஈஷா அறக்கட்டளை சார்பில் , “ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மாண்புமிகு துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்களுக்கு எங்களது நன்றிகள்” என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு. கே.பி. சர்மா ஒலி சத்குரு அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், “மஹாசிவராத்திரி விழா நேபாள் மற்றும் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. நேபாள் ராணுவம் மஹாசிவராத்திரி தினத்தை ராணுவ தினமாக கொண்டாடுகிறது. சிவனை யோகத்தின் மூலமாகவும், ஆதியோகியாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் அவர் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறார் என நம்புகின்றனர்.” என கூறியுள்ளார்.

இதற்கு ஈஷா அறக்கட்டளை சார்பில், “நமஸ்காரம் திரு. சர்மா ஒலி ஜி, உங்களுடைய மஹாசிவராத்திரி வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இனிய மஹாசிவராத்திரி வாழ்த்துக்கள்” என ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும் ஈஷா மஹாசிவராத்திரிக்கு வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1301

    0

    0