ஈஷா மஹாசிவராத்திரி : தியானலிங்க தரிசன நேரம் மாற்றம்
Author: Babu Lakshmanan18 February 2023, 8:33 am
ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு குடியரசு தலைவர் வருகை தருவதையொட்டி நாளை (பிப்-18) தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (பிப்.18) நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை தியானலிங்கம், லிங்கபைரவி, சூர்ய குண்டம், சந்திர குண்டம் ஆகிய இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
9 மணிக்கு பிறகு இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.