இஒஎஸ்-8 செயற்கைகோள் பயணம் வெற்றி அடைய திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு..!
Author: Vignesh15 August 2024, 3:22 pm
இஒஎஸ்-8 செயற்கைகோள் மாதிரியுடன் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ குழுவினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செய்ற்கைகோள்களை ஏவி வருகிறது. அந்தவகையில் புவி கண்காணிப்பு செயற்கை கோள் இஒஎஸ்-8 செயற்கைகோளை எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மூலம் சுதந்திர தினமான இன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ முன்னர் தெரிவித்திருந்தது.
இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு நாளை ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரோ குழுவினர் இன்று இஒஎஸ்-8 செயற்கைகோள் மாதிரியுடன் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டனர்.