‘ஆர்வமுள்ள மாணவர்களை இஸ்ரோ நிச்சயம் ஊக்குவிக்கும்’: மாணவர்களுடன் கலந்துரையாடிய இந்திய விண்வெளி கழக திட்ட இயக்குநர்..!!

Author: Rajesh
15 March 2022, 4:07 pm

மதுரை: தனியார் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி கழக திட்ட இயக்குநர் திரு. வெங்கட்ராமன் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி கழக திட்ட இயக்குநர் திரு. வெங்கட்ராமன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார்

ஸ்ரீ ஹநிசரிகோட்டா பகுதியில் உள்ள விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், செயற்கைகோள்களின் வகைகள், பயன்பாடுகள் குறித்தும் மாணவ-மாணவிகளிடம் விளக்கமளித்தார்

பள்ளி மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கு இஸ்ரோ திட்ட இயக்குநர் வெங்கட்ராமன் பதிலளித்தார். பின்னர் அவர் பேசுகையில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக விண்வெளி தினம் என சில நிகழ்ச்சிகள் நடத்துவருவோம். தற்போது கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆன்லைன் மூலம் விண்வெளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்

குழந்தைகளுக்கு விண்வெளி குறித்த பயிற்சி வழங்குகிறோம். தற்போதைய காலத்தில் போட்டிபோட்டு பொது அறிவை கற்றுக்கொள்ள வேண்டும். விண்வெளித்திட்டம் என்பதற்கு தனியாக பாடத்திட்டம் என்பது இல்லை. எல்லா பாடத்திட்டத்தையும் நாம் விண்வெளியில் பயன்படுத்துகிறோம்.

அறிவியலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே விண்வெளி ஆராய்ச்சியின் விண்ணப்பம் என்பதாகும். இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பரவலாக உள்ளது போட்டி உலகம் இது. பள்ளிகளிலிருந்து சிறந்த மாணவ- மாணவிகளாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை இஸ்ரோ விண்வெளி கழகம் ஊக்கப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1450

    0

    0