வாக்காளர்களுக்கு கைச் சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப் வழங்கல் : தேர்தல் அதிகாரிகளிடம் தேமுதிகவினர் வாக்குவாதம்

Author: kavin kumar
19 February 2022, 2:18 pm

மதுரை : மதுரையில் வாக்குசாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கைச் சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப் வழங்கியதாக கூறி தேர்தல் அதிகாரிகளிடம் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 73வது வார்டுக்கு உட்பட்ட கோவலன் நகர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் கைச்சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப்பை வழங்கி வருவதாக மாற்று கட்சி வேட்பாளர்களான தேமுதிகவை சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் இதனை கண்டித்து தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்காளர்களிடம் இருந்து பூத் ஸ்லிப் வாங்கி மாற்று பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை வாக்குச்சாவடி மையத்திலிருந்து அகற்றும் படியும், தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேமுதிகவை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 1308

    0

    0