புஸ்ஸிக்குத் தெரிந்தே பணம் கைமாற்றம்.. கொதிக்கும் விழுப்புரம் தவெக.. நடந்தது என்ன?

Author: Hariharasudhan
27 March 2025, 11:11 am

விழுப்புரம் தவெகவில் பொறுப்புகள் வழங்கப்படுவதற்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் தவெகவில் பதவிக்கு பணம் கேட்டு மாவட்டச் செயலாளர்கள் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாவட்டச் செயலாளர் பதவிகள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்ததாக மாநகர், நகர், ஒன்றிய அளவிலான பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

இந்த நிலையில், பல மாவட்டங்களில் நகரச் செயலாளர் பதவிக்கு 10 லட்சம், ஒன்றியச் செயலாளர் பதவிக்கு ஒரு லட்சம் ருபாய் என பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில், எப்போதும் தவெகவுக்கு தலைவலியாக இருக்கும் விழுப்புரம் தவெகவில், பதவிக்கு பணம் கேட்டு மாவட்டச் செயலாளர்கள் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று விழுப்புரம் மாட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள், விழுப்புரம் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிக்கு பணம் கேட்டு மாவட்டச் செயலாளர்கள் நிர்பந்தம் செய்வதாக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் குஷி மோகன் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர்.

Bussy N Anand

மேலும், “நகர மற்றும் மாவட்ட அளவிலான பதவி வழங்க விழுப்புரம் தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் குஷி மோகன், 3 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்கிறார். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது.

மாற்றுக் கட்சியில் இருந்து ஒரு வாரம் முன்பு வந்த முபாரக் என்பவருக்கு நகரச் செயலாளர் பதவி வழங்கியுள்ளனர். மாநில பொதுச்செயலாளர் ஆனந்துக்கு தெரிந்தே பணம் வசூல் நடைபெறுகிறது. தலைவர் விஜய்க்கு தெரிவிக்கவிடாமல் ஆனந்த் தடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

ரூ.4 லட்சம் பணம் கேட்டு கொடுக்காததால், எனக்கு பதவி கொடுக்கவில்லை. பதவிக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பதால் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், செய்தியாளர் சந்திப்பின்போது தவெக பொறுப்புக்காகப் பணம் கட்டிய காசோலையை நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு குஷி மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏற்கனவே பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாக எழுந்த பிரச்னைக்கு, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் விழுப்புரத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Mohanlal Empuraan Controversy பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!
  • Leave a Reply