விஜய் சேதுபதிக்கு பெரும் தலைவலியாக மாறிய பிரபல நடிகை.. அதுக்குன்னு இப்படியா பண்ணுவீங்க.?

Author: Rajesh
15 April 2022, 1:26 pm

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ஹீரோக்களில் முதலிடத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. அவருடைய கைவசத்தில் எப்போதுமே கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்கள் இருக்கும். கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தான் பிரபல நடிகை ஒருவர், அடுத்தடுத்த படங்களில் தன்னை நடிக்க வைக்க வேண்டும் என அந்த நடிகை சிபாரிசு செய்ய வலியுறுத்துகிறாராம்.
விஜய் சேதுபதியுடம் சுமார் 5 படங்களுக்கு மேல் அந்த நடிகை இணைந்து நடித்தும் விட்டார். அந்த நடிகையின் நச்சருப்பு தாங்க முடியாமல் படக்குழுவினரிடம் இதைப்பற்றி பேசுகிறாராம் நடிகர் விஜய்சேதுபது, ஆனால் படக்குழுவும் அந்த நடிகையுடன் நீங்கள் நடித்ததைப் பார்த்த ரசிகர்களுக்கு போரடித்திருக்கும். ஆகையால் அவர்கள் வேண்டவே வேண்டாம் என கும்பிடு போடுகின்றனராம்.

இதனால் அந்த நடிகைக்கு என்ன பதில் சொல்வது என நடிகர் விஜய் சேதுபதியும் தர்மசங்கடமான நிலையை சந்தித்து கொண்டிருக்கிறாராம். இப்படி சிபாரிசு செய்த சொல்லியே வற்புறுத்தும் அந்த நடிகையை வெறுத்து விட்டதாகவும் நடிகர் விஜய்சேதுபதி புலம்பிக் கொண்டிருக்கிறார்

அந்த நடிகை வேறு யாருமில்ல, குழந்தைகளுக்கு அம்மாவாகவும் தங்கையாகவும் ஸ்டுடென்ட் ஆகவும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அந்த நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!