எந்த கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை.. ஆனா அந்த கட்சியில் மட்டும் இருக்காதீங்க : நடிகர் கருணாஸ் பேச்சால் சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2023, 8:42 am

எந்த கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை.. ஆனா அந்த கட்சியில் மட்டும் இருக்காதீங்க : நடிகர் கருணாஸ் பேச்சால் சலசலப்பு!

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ், சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வருகின்ற 27 ஆம் தேதி மருது சகோதரர்கள் நினைவை போற்றும் வகையிலும் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி வருகின்ற நிலையில் இந்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்கின்ற கூட்டமாக அரூர் ரவுண்டானாவில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் கருணாஸ், நீங்கள் திமுகவில் இரு அதிமுகவில் இரு வேற எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் பிஜேபி கட்சியில் மட்டும் இருக்காதீர்கள் அது இந்த மண்ணுக்கு நல்லதல்ல என்று கூறினார். இந்த மண்ணைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு என்றும்,

தமிழகத்தில் உள்ள பணக்காரர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருக்க மாட்டார்கள் என்றும், கருணாஸ் 162 படங்கள் நடித்து 14 ஏக்கர் நிலத்தைக் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளாரா என்றும், அதை ஒருவர் போட்டோ எடுத்து நான் மட்டுமே விவசாயம் செய்வதாகவும், ஐயாயிரம் ஏக்கர் பத்தாயிரம் ஏக்கர் ஆர்பர் அனைத்தையும் ஆட்டைய போட்டுக்கொண்டு அதானி, குதானி என்று சுற்றுகிறவர்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நம்மை ஒருத்தரை மட்டும் பிடித்துக் கொள்வார்கள்.

இறைநம்பிக்கை எல்லோருக்கும் உண்டு. நித்தியானந்தாவை கும்பிடுகின்ற உங்களிடத்தில் நான் தேவரை கும்பிடுவது என்ன குற்றம். அப்படி கும்பிட்டால் என் மீது சாதி அடையாளம் படுத்துவார்கள் என பேசினார்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…